தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 226 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிரான 5 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி: தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 226 ஓட்டங்களாக நிர்ணயம்

by Staff Writer 16-03-2019 | 9:28 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 226 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. கேப் டவுன் நியூலேன்டஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முதல் இரண்டு விக்கெட்களும் 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. குசல் மென்டிஸ் மற்றும் அஞ்சலோ பெரேரா ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்காக 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சற்று ஆறுதல் அளித்தது. குசல் மென்டிஸ் ஒருநாள் அரங்கில் 14 ஆவது அரைச்சதத்தை எட்டிய நிலையில், 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அஞ்சலோ பெரேரா 31 ஓட்டங்களைப் பெற்றார்.