மஸ்டாங் வெற்றிக்கிண்ணம்: கல்கிசை புனித தோமஸ் கல்லூரியை வீழ்த்தியது கொழும்பு ரோயல் கல்லூரி

மஸ்டாங் வெற்றிக்கிண்ணம்: கல்கிசை புனித தோமஸ் கல்லூரியை வீழ்த்தியது கொழும்பு ரோயல் கல்லூரி

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2019 | 7:10 pm

Colombo (News 1st) கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான மஸ்டாங் வெற்றிக்கிண்ணத்திற்கான வருடாந்த ஒரு நாள் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 1 விக்கெட்டால் வெற்றியீட்டியது.

கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றது.

புனித தோமஸ் கல்லூரி சார்பாக உமயங்க சுவாரிஸ் 81 ஓட்டங்களைப் பெற்றார்.

256 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ரோயல் கல்லூரி அணி 48 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய லஹிரு மதுஷங்க 6 சிக்சர்கள் 1 பவுண்டரியுடன் 17 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசி, ரோயல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்