கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
ஐதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம்

ஐதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம்

ஐதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம்

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2019 | 5:14 pm

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.
பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.

விஷாலும், அனிஷாவும் சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்தனர்.

இதனையடுத்து, விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்