எத்தனோல் வர்த்தகத்தில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வௌிப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

எத்தனோல் வர்த்தகத்தில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வௌிப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2019 | 9:59 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கைன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு ரஞ்சன் ராமநாயக்க பதிலளித்தார்.

பொது எதிர்க்கட்சியில் உள்ளவர்களே அதிகளவில் கொக்கைன் பயன்படுத்துவதோடு, அவற்றை நாட்டிற்குக் கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தாம் தெரிவித்ததாக ரஞ்சன் ராமநாயக்க சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் உள்ள நான்கு பேர் இலங்கைக்கு அதிகளவில் எத்தனோல் கொண்டு வரும் பாரிய வர்த்தகர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரும் எதிர்க்கட்சியை சேர்ந்த மூவரும் எத்தனோல் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, அந்த நால்வரின் பெயர்களையும் சபையில் வெளிப்படுத்தினார்.

மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்