ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம்

அரச நிறுவன முறைகேடுகள் விசாரணை: ஆணைக்குழுவிற்கு புதிதாக இருவர் நியமனம்

by Staff Writer 15-03-2019 | 3:42 PM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழுவில் புதிய அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் எம்.பி. தர்மவர்தன மற்றும் அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் W.K.K. குமாரசிறி ஆகியோர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் பி.ஏ. பிரேமதிலக்க மற்றும் அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் லலித் ஆர். டி சில்வா ஆகியோர் ஆணைக்குழுவிலிருந்து விலகியதை அடுத்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 14 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜனி வீரவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய அமரசிங்க உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.