மும்பையில் ரயில் நிலைய நடைமேடை இடிந்து வீழ்ந்ததில் ஐவர் பலி

மும்பையில் ரயில் நிலைய நடைமேடை இடிந்து வீழ்ந்ததில் ஐவர் பலி

மும்பையில் ரயில் நிலைய நடைமேடை இடிந்து வீழ்ந்ததில் ஐவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

15 Mar, 2019 | 3:56 pm

இந்தியாவின் மும்பையில் நடைமேடை இடிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை – சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள நடைமேடையே இடிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது மேலும் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

சன நெரிசல் மிக்க பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையமானது மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையம் என்பதுடன், இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே நடைமேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்