பாதாள உலகக் குழுவை சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் கைது

பாதாள உலகக் குழுவை சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2019 | 5:51 pm

Colombo (News 1st) விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலகக் குழுவை சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை – ஹேக்கித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கிலோகிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் கொக்கைன் மற்றும் 1.5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் மைக்ரோ ரக துப்பாக்கிகள் இரண்டும் 5 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 15 போலி இலக்கத்தகடுகளும் ஒரு தொகை கைவிலங்குகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரிடிப்படை தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்