தென் ஆபிரிக்காவிற்கு எதிரான T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2019 | 4:19 pm

Colombo (News 1st) தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் நேற்று (14) அறிவிக்கப்பட்டதுடன், உப தலைவர் பொறுப்பிற்கு நிரோஷன் திக்வெல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், சுழற்பந்துவீச்சாளரான ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மென்டிஸ், அஞ்சலோ பெரேரா, தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸ், பிரியமால் பெரேரா, திசர பெரேரா, இசுரு உதான, அகில தனஞ்சய, லக்சான் சந்தகேன், அசித பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய வீரர்களாவர்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி கேப்டவுனில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டிகளின் போது இலங்கை அணியின் பயிற்றுநராக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ரிக்ஸன் செயற்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்