கொழும்பு – குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

கொழும்பு – குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

கொழும்பு – குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2019 | 4:09 pm

Colombo (News 1st) கொழும்பு – குருநாகல் வீதியின் பொல்கஹவெல, மெத்தலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 4 மற்றும் 6 வயதான பிள்ளைகளும் 16 வயதான சிறுவனும் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாதம்பை – சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாபம் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரதேச சபை உறுப்பினர் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்