மின்சக்தித் துறையில் 60 வீதம் எரிசக்தியாக மாற்றம்

மின்சக்தித் துறையில் 60 வீதத்தை எரிசக்தியாக மாற்ற திட்டம்

by Staff Writer 14-03-2019 | 1:38 PM
Colombo (News 1st) 2030ஆம் ஆண்டளவில் மின்சக்தி துறையில் 60 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரியசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம், வவுனதீவு, மாவ, பன்னல மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் ஒரு மெகாவோல்ட் மின் அழுத்தத்துடனான சூரியசக்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில், மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.