மாலம்பே - கோட்டை ரயில் நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 14-03-2019 | 2:41 PM
Colombo (News 1st) ஜப்பானின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாலம்பே - கோட்டை ரயில் நிலையத்திற்கான ஒப்பந்தம் நேற்று (13ஆம் திகதி) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டிருந்தார். சுமார் 17 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட இந்த ரயில்வே பாதையின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டில் நிறைவுபெறவுள்ளன. 17 ரயில்வே நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட நிர்மாணப்பணிகளை அடுத்த மாதம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்துள்ளார். வற் வரி இல்லாமல் 100 மில்லியன் டொலருக்கான ஒப்பந்தம் உள்ளதாகவும் அதனை ஜப்பானிடமிருந்து கடனுதவியாகப் பெற்றுக் கொள்கிற்தாகவும் இதற்கான வட்டிவீதம் நூற்றுக்கு ஒரு வீதம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்