புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 14-03-2019 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மக்களின் போராட்டங்களே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளதாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 02. ஜனாதிபதி, பிரதமரின் செயலகம், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள், அரச சேவைகள், நீதிச் சேவை, பொலிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 03. உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுதல், உண்மை மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 04. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு விளக்கமளிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 05. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வௌிநாட்டுச் செய்தி 01. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுவது தொடர்பிலான தெரேசா மேயின் ஒப்பந்தம், பாராளுமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் மேலதிக வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. அணியில் இருக்கின்ற இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அதன்மூலம் துடுப்பாட்ட வரிசையை மேம்படுத்த வேண்டும் என, அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.