ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

by Staff Writer 14-03-2019 | 7:03 AM
Colombo (News 1st) கென்யாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (14) ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று கென்யா நோக்கிப் பயணமானார். சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும் எனும் தொனிப்பொருளில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு நாளை வரை நடைபெறவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்