உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: அணி தொடர்பில் தௌிவுபெற்றுள்ளதாக விராத் கோஹ்லி தெரிவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: அணி தொடர்பில் தௌிவுபெற்றுள்ளதாக விராத் கோஹ்லி தெரிவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: அணி தொடர்பில் தௌிவுபெற்றுள்ளதாக விராத் கோஹ்லி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2019 | 1:31 pm

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தமது அணி தொடர்பில் முழுமையான தௌிவைப் பெற்றுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் தமது குழாம் சிறப்பாக செயற்படவில்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

டில்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சகல விக்கெட்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இந்திய அணியின் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 8,010 ஓட்டங்களை எட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்