by Bella Dalima 14-03-2019 | 3:59 PM
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்தியப் படங்களில் நடித்து புகழ்பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.
1950 முதல் 1963 வரையிலான இந்திய கால்பந்து வரலாற்றைச் சொல்வதோடு, முன்னாள் இந்திய கால்பந்துப் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Badhaai Ho படத்தை இயக்கிய அமித் சர்மா இயக்கவுள்ளார். ரிதேஷ் ஷா வசனம் எழுத, சைவின் குவாட்ரஸ் திரைக்கதை அமைக்கிறார்.
போனி கபூர் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.