வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று

வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று

by Staff Writer 13-03-2019 | 7:06 AM
Colombo (News 1st) வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சு அலுவலகங்கள், அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 25 விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் குழுநிலை விவாதம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி மாலை, வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு, 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்துசிவலிங்கம் ஆகியோர் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கினை பதிவுசெய்தனர். வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோர் சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.