செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 13-03-2019 | 6:07 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த யாதுரிமை எழுத்தாணை மனு, வாபஸ் பெறப்பட்டுள்ளது. 02. இலஞ்சமாக 20,000 ரூபாவைப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள கஹவத்த – ஆந்தான பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 03. இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தறை மாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 04. பன்னிப்பிட்டி பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 05. பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 06. மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 07. 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம், 43 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது. 08. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) அறிவித்துள்ளார். 02. இந்தியாவின் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பகுதியில் பல பெண்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர்களை வீடியோ எடுத்துவந்த குழு சிக்கியுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. கிரிக்கெட்டுக்குள் இந்தியா அரசியலை உட்புகுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.