தென் ஆபிரிக்க அணியின் வெற்றி இலக்கு 190 ஓட்டங்களாக நிர்ணயம்

தென் ஆபிரிக்க அணியின் வெற்றி இலக்கு 190 ஓட்டங்களாக நிர்ணயம்

தென் ஆபிரிக்க அணியின் வெற்றி இலக்கு 190 ஓட்டங்களாக நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2019 | 9:23 pm

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் வெற்றி இலக்கு 190 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஃபெப் டு பிலெசிஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

உபுல் தரங்க, பிரியமால் பெரேரா ஆகியோர் இலங்கை அணியில் இணைக்கப்பட்டு நிரோஷன் திக்வெல்ல, உபாதைக்குள்ளான குசல் ஜனித் பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

இளம் வீரரான பிரியமால் பெரேரா சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கி விக்கெட்களை இழந்தது.

தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த அஞ்சலோ பெரேராவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இரண்டு இரட்டை சதங்களை விளாசி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த அவருக்கு ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காதது வியப்புக்குரிய விடயமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்