ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு கொடுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு கொடுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு கொடுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2019 | 4:02 pm

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்திற்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று (13) படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில், ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் பன்மொழிப் படத்திற்கும் ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாவதால், அனைத்து மொழிகளுக்கும் பொதுவான தலைப்பாக ‘ஹீரோ’ என்று வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் இதற்கு முன் 1984 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் படம் வெளியாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு நிதின் நடிப்பில் இன்னொரு படமும் இதே தலைப்பில் வெளியாகியுள்ளது. தெலுங்கைப் பொறுத்தவரை இந்த ‘ஹீரோ’ தலைப்பு பயன்படுத்தப்படுவது இது மூன்றாவது முறை.

தற்போது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பும் ‘ஹீரோ’ என இருப்பதால், இரண்டு படங்களில் ஏதேனும் ஒரு தரப்பு கண்டிப்பாக தலைப்பை மாற்றியாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்