20,000 ரூபா இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2019 | 4:34 pm

Colombo (News 1st) 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டுள்ள கஹவத்த – ஆந்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது வழக்கு தொடராதிருப்பதற்காக 20,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்