திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-03-2019 | 5:55 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 02. பொரளை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த சரச்சந்திரவின் இறுதிக்கிரியைகள் பொரளையில் இடம்பெற்றன. 03. ஏப்ரல் 3ஆம் திகதியில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்கான தேசிய திட்டத்தை முன்னெடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 04. ஆசிய பசுபிக் வலய வானொலி மற்றும் தொலைக்காட்சி தொலைத்தொடர்புகள் சங்கத்தின் (ABU) புலைமை சொத்து மற்றும் சட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. 05. கடந்த 4 வருடங்களில் 1,500 பில்லியன் கடன் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. வட கொரிய ஜனாதிபதியின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாமின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்தோனேஷிய பெண், விடுதலை செய்யப்பட்டுள்ளார். 02. இந்திய மக்களவைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன் கெப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. 03. விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி விசாரணையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா உபாதை காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்