அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்பு

அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஹர்த்தால்

by Staff Writer 12-03-2019 | 10:12 AM
Colombo (News 1st) அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தின் சில பகுதிகளில் இன்று (12) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. புத்தளம் - வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரைதீவு, சேரக்குழி பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினூடாக சேகரிக்கப்படும் கழிவுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையத்தில் சேகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, மாநகரசபைகள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வீடுகள், கடைகள் மற்றும் வீதியோரங்களில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஹர்த்தால் காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.