மொறட்டுவையில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினர் தொடர்பில் விசாரணை

மொறட்டுவையில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினர் தொடர்பில் விசாரணை

மொறட்டுவையில் ஹெரோயினுடன் கைதான தம்பதியினர் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2019 | 7:13 am

Colombo (News 1st) மொறட்டுவ ராவதாவத்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் முன்னெடுக்கவுள்ளனர்.

சந்தேகநபர்களான தம்பதிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ஹெரோயின் கைப்பற்றப்பட்ட வீடானது, தம்பதிகளால் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொறட்டுவை – ராவதாவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 167 கிலோகிராம் நேற்று கைப்பற்றப்பட்டது.

இதன்பெறுமதி சுமார் 1,800 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்