ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2019 | 6:52 am

Colombo (News 1st) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதால், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், குறித்த ஆணைக்குழுவிற்கு இதுவரை 742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைத்த முறைப்பாடுகளில் 18 முறைப்பாடுகள், முதல்கட்ட விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சினூடாக உயர்தர மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு டெப் வழங்குவதற்கான விலைமனுவில் கோரலில் ஊழல் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதனைத்தவிர, இலங்கை கால்ப்பந்தாட்ட சம்ளேனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிடைத்துள்ள முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, தனிப்பட்ட பிரச்சினைகளாக காணப்படுவாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்