அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை

by Staff Writer 12-03-2019 | 7:41 AM
Colombo (News 1st) மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. குறித்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.