அதிக வட்டியில் இரண்டரை பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ள இலங்கை

அதிக வட்டியில் இரண்டரை பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ள இலங்கை

எழுத்தாளர் Bella Dalima

12 Mar, 2019 | 8:27 pm

Colombo (News 1st) முறிகள் விநியோகம் மூலம் பெறப்பட்ட கடன் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிடப்பட்டது.

பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் குறைந்த வட்டியில் முறிகள் மூலம் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ள போது, இலங்கை அதிக வட்டிக்கு இறையாண்மை கொண்ட முறிகளை விநியோகித்துள்ளமை இதன்போது வௌிக்கொணரப்பட்டது.

மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க,

இன்று 10 வருடங்களுக்கு 7.85 வீதத்திற்கு கடனைப் பெற்றுள்ளனர். மலேசியா 3.87 வீதத்திற்கும் தாய்லாந்து 2.51 வீதத்திற்கும் வியட்நாம் 4.87 வீதத்திற்கும் கிரேக்கம் 3.84 வீதத்திற்கும் பொஸ்வானா 5.27 வீதத்திற்கும் பெற்றிருந்தனர். அதேபோன்று, இலங்கை 2, 3 வருடங்களுக்கு முன்னதாக இதே தொகையை 5 வீதத்திற்கும் குறைவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது

என தெரிவித்தார்.

பெருந்தொகைக்கான முறிகளை 7.85 என்ற வட்டி வீதத்தில் மத்திய வங்கி ஏன் விநியோகித்தது என்பதை தௌிவூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க,

நாட்டின் மத்திய வங்கி சில சந்தர்ப்பங்களில் நாட்டின் அபிவிருத்தி தடைப்படும் வகையில் செயற்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கூறினால், அவர்கள் அவசரப்படுகின்றனர். வட்டி செலுத்த வேண்டியுள்ளது, கடன் செலுத்த வேண்டியுள்ளது. நாம் வாங்கிய கடனாகவும் இருக்கலாம். நாடு என்ற வகையில், யார் வாங்கியிருந்தாலும் நாட்டை முன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டியது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியம் கூறியதும் இலங்கையே அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.

என பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்