ABU வின் சட்டக்குழுவின் தலைமை பொறுப்பு MTV/MBCக்கு

ABU சங்கத்தின் சட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பு MTV/MBC வசம்

by Staff Writer 11-03-2019 | 5:28 PM
Colombo (News 1st) ஆசிய பசுபிக் வலய வானொலி மற்றும் தொலைக்காட்சி தொலைத்தொடர்புகள் சங்கத்தின் (ABU) புலைமை சொத்து மற்றும் சட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இலங்கை சார்பில் இந்தத் தலைமைத்துவம் எம்.டீ.வி./எம்.பி.சி. (MTV/MBC) ஊடக வலையமைப்பான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சட்டம் மற்றும் மனிதவள குழுமப் பணிப்பாளர் சுரங்க ஜயலத்திற்குக் கிடைத்துள்ளது. ஸ்டைன் (Stein) கலையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின்போது இந்த தலைமையை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சார்பாக அடுத்த 2 வருடங்களுக்கு அந்தக் குழுவின் தலைவராக வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சட்டம் மற்றும் மனித வளப் பிரிவு குழுமப் பணிப்பாளர் சுரங்க ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,
மகாராஜா நிறுவனம் மற்றும் இலங்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் மற்றும் வாய்ப்பு இதுவாகும். குறிப்பாக ஆசிய மற்றும் பசுபிக் உள்ளிட்ட சர்வதேச ஊடகத்தை மேம்படுத்துவதற்கு எமது நிறுவனத்திற்கு கிட்டிய சந்தர்ப்பமாகும்
என வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் சுரங்க ஜயலத் தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக் பிராந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி தொலைத்தொடர்புகள் சங்கத்தினத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதுடன் இம்முறை மாநாட்டை வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனமும் எம்.ரி.வி. செனல் தனியார் நிறுவனமும் முன்னின்று நடத்தியிருந்தன. இந்த சங்கத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இந்தநிலையில்,
கலாசார புலன் தொத்துக்கள் புதிய தொழில்நுட்பத்துடன் மோதுவதற்கு இடமளித்து நாம் பார்த்துக் கொண்டிருப்பதா என்ற கேள்வி எழலாம். இந்த கொள்கையே கலாசார புலன் சொத்துக்கள் தொடர்பான மீறல்களை கட்டுப்படுத்துகின்றது
என தேசிய புலன்சொத்துக்கள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கீதாஞ்சலி ரணவக தெரிவித்துள்ளார்.
ஆசியாவை நோக்கினால் புலன் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது பல எதிர்ப்பாளர்கள் உள்ளனர். தந்திரமாக அதனை தடுக்கின்றனர். அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக முதலீடுகளை பாதுகாக்கும்போது புலன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்
வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சஷீ ராஜமகேந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆசிய பசுபிக் பிராந்திய வானொலி மற்றும் தொலைகாட்சி தொலைத்தொடர்புகள் சங்கத்தின் புலன் சொத்துக்கள் மற்றும் சட்டக் குழுவின் தலைவராக சீனாவைச் சேர்ந்த கலாநிதி யேங் போ செயற்பட்டார். இதேவேளை,
கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது மற்றும் ஒளிபரப்பாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் நாம் தற்போது சிந்திக்க வேண்டும். காரணம் நாம் ஒன்லைன் சவாலை எதிர்கொண்டுள்ளோம். உதாரணமாக எமது விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்ற போது இணையத்தளம் ஊடாக அவை திருடப்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என்ற கேள்வியும் உள்ளது
என புலன்சொத்துக்கள் மற்றும் சட்டக் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி யேங் போ தெரிவித்துள்ளார்.