by Chandrasekaram Chandravadani 11-03-2019 | 3:43 PM
Colombo (News 1st) வட கொரிய ஜனாதிபதியின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாமின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்தோனேஷிய பெண், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கிம் ஜோங் நாமின் முகத்தில் நச்சுத்திரவம் விசிறப்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, திரவத்தை விசிறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிட்டி ஐஸ்யா (Siti Aisyah) மற்றும் வியட்நாமைச் சேர்ந்த டோன் தி ஹியூங் (Doan Thi Huong) ஆகிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், குறித்த கொலை தொடர்பில் சிட்டி ஐஸ்யா மீதான குற்றச்சாட்டை கைவிடுமாறு, இந்த வழக்கின் சட்டத்தரணி கோரியிருந்தார்.
இதனையடுத்து, சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிட்டி ஐஸ்யாவை விடுதலை செய்வதாக அறிவித்ததாக, ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, கிம் ஜோங் நாமின் மீது இரு பெண்கள் நச்சுத்திரவத்தை விசிறப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.