அ.தி.மு.க.வுடன் கெப்டன் விஜயகாந்த் கூட்டு

அ.தி.மு.க.வுடன் கெப்டன் விஜயகாந்த் கூட்டு

by Fazlullah Mubarak 11-03-2019 | 2:54 PM

கெப்டன் விஜயகாந்த் எவ்விதமான அரசியல் முடிவை எடுப்பார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அதற்கான விடை கிடைத்திருக்கின்றது.

இந்திய மக்களவைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன் கெப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. நிகழ்வில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் விஜயகாந்த் ஆகிய பலர் கலந்துகொண்டிருந்தனர்.