பொரளை விபத்து: டிபென்டர் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

பொரளை விபத்து: டிபென்டர் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

பொரளை விபத்து: டிபென்டர் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2019 | 2:43 pm

Colombo (News 1st) பொரளை போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட உதேஷ் ரத்னாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் சந்தேகபரை ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திரவின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் இன்று (11) நடைபெறவுள்ளது.

இதேவேளை, அன்னாரின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் 2 வாரங்களாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்த சாகர சரத்சந்திர உயிரிழந்தார்.

கடந்த 24 ஆம் திகதி கடமை நிமித்தம் மோட்டார்சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதிகாலை 4.30 மணியளவில் பம்பலப்பிட்டி புல்லஸ் சந்தியில் வைத்து டிபென்டர் வாகனமொன்று மோதி தப்பிச் சென்றது.

விபத்தில் உயிரிழந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி 3 பிள்ளைகளின் தந்தையாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்