நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

நவகமுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 Mar, 2019 | 2:36 pm

Colombo (News 1st) நவகமுவ – கொடெல்லவத்த பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 37 வயதான சமில பிரசாத் கருணாரத்ன எனவும் இவர் பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சடலத்தில் அருகிலிருந்து டி – 56 ரக துப்பாக்கியின் ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்