விசா நடைமுறையை நீக்குவது குறித்து ஜனாதிபதி கருத்து

சுற்றுலா, பௌத்த சமய நடவடிக்கைக்காக விஜயம்செய்யும் நாடுகளுக்கான விசாவை நீக்க தீர்மானம்

by Staff Writer 10-03-2019 | 7:43 AM
சமய நடவடிக்கைக்காக விஜயம்செய்யும் நாடுகளுக்கான விசா நீக்கம் Colombo (News 1st) சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில் பல நாடுகளுக்கான விசா நடைமுறையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடுவெல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு அருகிலுள்ள 5 நாடுகளைத் தவிர ஏனைய உலக நாடுகளுக்கான விசா நடைமுறையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்