காலி - அக்குரல பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது

காலி - அக்குரல பகுதியில் ஒரு கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

by Staff Writer 10-03-2019 | 7:50 AM
Colombo (News 1st) காலி - அம்பலாங்கொட - அக்குரல பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், நேற்று பிற்பகல் சந்தேகநபர்கள் இருவருடன் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் 65 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்களின் கார் ஒன்றும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 58 மற்றும் 43 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களாவர். காலி, ஹிக்கடுவ மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகளில் மிக நீண்டகாலமாக இந்த சந்தேக நபர்களால் போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பலபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.