அரசியலமைப்புப் பேரவையின் கடிதம்

அரசியலமைப்புப் பேரவையின் கடிதம்

by Staff Writer 10-03-2019 | 9:49 PM

அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்து, ஜனாதிபதிக்கு பேரவை நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற, அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேரவையில் காணப்படும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், சபாநாயகர் கரு ஜயசூரியவை தலைவராகக் கொண்ட அரசியலமைப்புப் பேரவை, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், அதன் சுருக்கத்தை நேற்றிரவு ஊடகங்களுக்கு வௌியிட்டது. தமது பேரவை தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து பாரதூரமானது எனவும் அநீதியானது எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதன் சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பேரவையில் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தாமும் இணங்குவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நியமித்தல், தமது பேரவை அரசியலமைப்பிற்கமைய செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அரசியலமைப்புப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்புப் ​பேரவையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், அதனை பேரவையிடம் முன்வைக்குமாறு ஜனாதிபதியின் கவனத்திற்கு தயவுடன் கொண்டுவருவதாகவும் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்