டியூனிஸியாவில் 11 சிசுக்கள் உயிரிழப்பு: சுகாதார அமைச்சர் இராஜினாமா

டியூனிஸியாவில் 11 சிசுக்கள் உயிரிழப்பு: சுகாதார அமைச்சர் இராஜினாமா

டியூனிஸியாவில் 11 சிசுக்கள் உயிரிழப்பு: சுகாதார அமைச்சர் இராஜினாமா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Mar, 2019 | 8:21 am

Colombo (News 1st) வட ஆபிரிக்க நாடான டியூனிஸியாவில் (Tunisia) 11 சிசுக்கள் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டெரௌப் செரிப் (Abderraouf Cherif) பதவி விலகியுள்ளார்.

டியூனிஸிய தலைநகர் டியூனிஸில் உள்ள வைத்தியசாலையொன்றில் 11 சிசுக்கள், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பதவியை ஏற்று நான்கே மாதங்களான அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டேரௌப் செரிப், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே, மருத்துவ பாதுகாப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகள், சிசுக்களின் உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிசுக்களின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குக்குமாறு பிரதமர் யூசுப் சாஹெட் உத்தரவிட்டுள்ளார்.

வட ஆபிரிக்காவில், மருத்துவம் மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு அதிகம் பேணப்படும் நாடாக, டியூனிஸியா காணப்பட்டது.

எனினும், 2011 ஆம் ஆண்டு, ட்சைன் எல் அபிடைன் பென் அலி ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், டியூனிஸியாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்துப் பற்றாக்குறை என்பன நிலவிவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்