சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Mar, 2019 | 6:17 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தபால் மூலமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

02. அரச நிறுவனங்கள் சில சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

03. அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 610 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

04. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

05. வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட சில பிரேரணைகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கும் பொருட்டு, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

02. இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

01. யாழ். மத்திய மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

02. நீல வர்ணங்களின் மோதலில், 12 வருடங்களின் பின்னர் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி சம்பியனானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்