போதைப்பொருள் ஒழிப்பிற்கு முப்படையினர் பங்களிப்பு

போதைப்பொருள் ஒழிப்பிற்கு முப்படையினரும் பங்களிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 09-03-2019 | 3:18 PM
Colombo (News 1st) போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் கல்வி, சுகாதாரம், பொது நிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில், போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கட்சி பேதமின்றி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாபதி இங்கு தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்