பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் விலைகள் உயர்த்தப்படும்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் விலைகள் உயர்த்தப்படும்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் விலைகள் உயர்த்தப்படும்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2019 | 3:32 pm

Colombo (News 1st) அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பேக்கரி துறைக்கு எதிர்பார்க்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.

தமது சங்கத்தின் யோசனைத்திட்டம் குறித்து அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்