தபால் மூல போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட திட்டம்

தபால் மூல போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட திட்டம்

தபால் மூல போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

09 Mar, 2019 | 3:39 pm

Colombo (News 1st) தபால் மூலமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க எதிர்வரும் காலத்தில் விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, தபால் பரிமாற்றத்தினூடாக போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று நேற்றிரவு (08) கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்