அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார்

அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார்

அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார்

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2019 | 5:44 pm

அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லுனர், தொலைக்காட்சி நட்சத்திரம், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட பத்மலட்சுமி (48), ஐ.நா. வளர்ச்சித்திட்டத்தின் (UNDP) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ரு‌ஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.

கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவர் ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இதற்கான அறிவிப்பு ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவலை UNDP தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பத்மலட்சுமி நேற்று முன்தினம் (07)வெளியிட்டார்.

இதன்போது,

பல நாடுகளில் வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமத்துவமின்மையை ஒழிக்க முடியவில்லை. சமத்துவமின்மை விடாப்பிடியுடன் சமூகத்தில் இருக்கிறது. ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் நல்லெண்ணத் தூதர் என்ற வகையில், எனது முக்கிய கவனம், சமத்துவம் இல்லாத நிலை, பணக்கார நாடுகளில் மட்டுமல்ல ஏழை நாடுகளிலும் உள்ளது, இது மக்களை பாதிக்கக்கூடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுவேன்

என பத்மலட்சுமி குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்