வடக்கின் பெருஞ்சமர்: சென்.ஜோன்ஸ் கல்லூரி  முன்னிலை

வடக்கின் பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி 107 ஓட்டங்களால் முன்னிலை

by Staff Writer 08-03-2019 | 8:35 PM
Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 107 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் சென். ஜோன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை இன்றைய இரண்டாம் நாள் முடிவில் பெற்றிருந்தது. தனுஜன் கிறிஸ்டி பிரசன்னா 56 ஓட்டங்களுடனும், செளமியன் நாகேந்திரராஜா 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென்.ஜோன்ஸ் அணி 181 ஓட்டங்களையும், யாழ். மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களையும் பெற்றன. மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது.