நீல வர்ணங்களின் மோதல்: ரோயல் கல்லூரி 10 ஓட்டங்களால் முன்னிலை

by Staff Writer 08-03-2019 | 7:48 PM
Colombo (News 1st) கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான 140 ஆவது வருடாந்த நீல வர்ணங்களின் மோதலில் ரோயல் கல்லூரி அணி 10 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் ரோயல் கல்லூரி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் முடிவுற்றது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோயல் கல்லூரி அணி 158 ஓட்டங்களையும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி 296 ஓட்டங்களையும் பெற்றன. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (09) தொடரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.