எதிர்வரும் 15 ஆம் திகதி கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

by Staff Writer 08-03-2019 | 4:14 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது இது தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை - தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாக கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கச்சத்தீவு திருவிழா தொடர்பில் இன்று இராமேஸ்வரத்திலும் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.