வடக்கின் பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி 107 ஓட்டங்களால் முன்னிலை

வடக்கின் பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி 107 ஓட்டங்களால் முன்னிலை

வடக்கின் பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி 107 ஓட்டங்களால் முன்னிலை

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2019 | 8:35 pm

Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான 113 ஆவது வடக்கின் பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 107 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் சென். ஜோன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை இன்றைய இரண்டாம் நாள் முடிவில் பெற்றிருந்தது.

தனுஜன் கிறிஸ்டி பிரசன்னா 56 ஓட்டங்களுடனும், செளமியன் நாகேந்திரராஜா 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென்.ஜோன்ஸ் அணி 181 ஓட்டங்களையும், யாழ். மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களையும் பெற்றன.

மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்