சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் முறைகேடு: விஜேதாச ராஜபக்ச முறைப்பாடு

சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் முறைகேடு: விஜேதாச ராஜபக்ச முறைப்பாடு

சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் முறைகேடு: விஜேதாச ராஜபக்ச முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2019 | 4:05 pm

Colombo (News 1st) சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்சவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் எவ்வித நலனையும் பெற்றிராத சுரக்ஷா திட்டத்தின் ஊடாக 2300 மில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 2018 இல் அச்சிடப்பட்ட 29 மில்லியன் பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் நிழற்படம் அச்சிடப்பட்டதன் ஊடாக அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி விஜேதாச ராஜபக்ச ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 522 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்