புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 07-03-2019 | 5:57 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நாட்டில் இதுவரை கைப்பற்றப்பட்ட சகல போதைப்பொருட்களையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி அழிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 02. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடர்வதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார். 03. மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான காபன் பரிசோதனை அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 04. தலைமறைவாகியுள்ள அர்ஜூன மகேந்திரனைக் கைது செய்ய இன்டர்போல் மீண்டும் சிவப்பு அறிக்கை வௌியிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 05. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன பதவிப்பிரமாணம் செய்துள்ளார். 06. தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. வட கொரியா தமது ரொக்கட் ஏவுதளத்தைப் மீளப் புனரமைத்து வருவதாக புதிய செய்மதிப் படங்களின் மூலம் தெரியவருவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 02. பிரித்தானியாவின் இரு விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையத்துக்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. விளையாட்டுச் செய்தி 01. அங்கம்பொர என அழைக்கப்படும் இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய விளையாட்டிற்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்