காலியில் பழ உற்பத்தி கிராமங்கள் உருவாக்கம்

காலி மாவட்டத்தில் பழ உற்பத்தி கிராமங்கள் உருவாக்கம்

by Staff Writer 07-03-2019 | 1:19 PM
Colombo (News 1st) தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ், காலி மாவட்டத்தில் 14 பழ உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஆயிரம் தோடம்பழக் கன்றுகள், ஆயிரம் தூரியன் கன்றுகள் மற்றும் 2,000 மாங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக, அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக சுமார் 3,26,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.