வட கொரியா ரொக்கெட் தளத்தை மீள புனரமைப்பது தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி

வட கொரியா ரொக்கெட் தளத்தை மீள புனரமைப்பது தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி

வட கொரியா ரொக்கெட் தளத்தை மீள புனரமைப்பது தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Mar, 2019 | 12:38 pm

Colombo (News 1st) வட கொரியா தமது ரொக்கெட் தளத்தை மீள புனரமைப்பதாக வௌியாகிய தகவல் உறுதியானது எனில், அது தொடர்பில் அதிருப்தியடைவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியா தமது ரொக்கெட் ஏவுதளத்தைப் மீளப் புனரமைத்து வருவதான புதிய செய்மதிப் படங்கள், நேற்று வௌியாகின.

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்று இரு நாட்களில் இந்த செய்மதி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியது.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன்னுக்கு இடையிலான குறித்த பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்