மதுபானம் தொடர்பிலான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மதுபானம் தொடர்பிலான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மதுபானம் தொடர்பிலான தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2019 | 11:41 am

Colombo (News 1st) மதுபானங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகத்தினால் புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, 24 மணித்தியாலங்களும் பொலிஸாரைத் தொடர்புகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம்,

0113024820, 0113024848, 0113024850 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக சட்டவிரோத மதுபானங்கள் தொடர்புகளை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள சட்டவிரோத மதுபான நடவடிக்கைகளை சுற்றிவளைப்பதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, பொலிஸ்மா அதிபரினால் குறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்