பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

07 Mar, 2019 | 3:29 pm

எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் குசலகுமாரி (83). மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு 250 படங்களுக்கு மேல் நடனமாடி இருக்கிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனது தம்பி சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவர் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

குசலகுமாரி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்